கரிப்பாலை, நஞ்சு முறிச்சான் கொடி, கொடிப்பாலை, அந்தமூல், காகித்தம் ஆகிய மாற்றுப் பெயர்களும் இந்த தாவரத்திற்கு உண்டு. இலை, வேர், ஆகியவை சிறப்பான மருத்துவப் பயன் கொண்டவை.
நஞ்சறுப்பான் இலை, வேர், கைப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டவை. வியர்வையைப் பெருக்கும்; கோழையகற்றும்; விஷ நச்சுகளை முறிக்கும்; வாந்தி உண்டாக்கும்.
நஞ்சை வெளியாக்க இலைகளை நன்கு அரைத்து, எலுமிச்சம் பழ அளவு உள்ளுக்கு கொடுக்க வேண்டும். அல்லது இலை, வேர் ஆகியவற்றை உலர்த்தி தூள் செய்து வைத்துக் கொண்டு, 2 தேக்கரண்டி அளவுடன் சிறிதளவு மிளகுத் தூள் கலந்து தேனில் குழைத்து உள்ளுக்கு கொடுக்க வேண்டும்.