சின்ன வெங்காயத்தை அரைத்து முடியின் மயிர்க் கால்களில் பூசி வந்தாலே போதும், முடிவளர ஆரம்பிக்கும். வாரத்திற்கு இரு நாட்களை மட்டும் தேர்ந்தெடுங்கள். தினமும் தலைக் குளிக்க வேண்டாம். 5 அல்லது 6 வெங்காயத்தை எடுத்துக் கொண்டு அதை மை போல் அரைத்து வைக்கவும். அரைத்த வெங்காயத்தை முடியின் வேர்க்கால்களில் படும் படியும். வழுக்கை விழுந்த இடத்திலும் தேய்க்க வேண்டும்.
இரவில் தூங்கு வதற்கு முன்னர் ஒரு தேக்கரண்டி எண்ணெய்யை எடுத்து மயிர்க் கால்களில் படும்படி மசாஜ் செய்து விடுங்கள். வழுக்கை தலையிலும் செய்தால் முடி வளர ஆரம்பிக்கும். வழுக்கையில் முடி வளரும். இந்த எண்ணெய் மற்றும் வெங்காயத்தை பயன்படுத்துங்கள் கண்டிப்பாக உங்களுக்கு முடி வளரும். இரும்புச்சத்தை அதிகரிக்கும் தேன், பேரீச்சை, கறிவேப்பிலை, முருங்கையை அதிகமாக உடலுக்கு சேர்த்திடுங்கள்.