இரும்புச்சத்து குறைபாடு வருவதற்கான காரணங்கள் என்ன தெரியுமா...?

Webdunia
இரும்புச் சத்துக் குறைபாட்டால் ஆண்களைக் காட்டிலும் பெண்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இது பெண்களுக்கு மட்டுமல்ல பொதுவாகவே உடல் ஆற்றல்  அதிகரிக்கவும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும் இரும்பு சத்து மிகவும் அடிப்படையான தேவை என்பதை பலரும் புரிந்துகொள்ள வேண்டும்.

சரிவிகித உணவை சரியாக உண்ணாமல் இருப்பதே ஹீமோகுளோபின் குறைய காரணம் ஆகும். பொதுவாக இரும்பு சத்து அதிகம் உள்ள உணவை தவிர்பவர்களுக்கு ஹீமோகுளோபின் குறைபாடு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
 
உடல் ஆற்றல் குறைந்து எப்போதும் சோர்வாகவும், சோம்பேறியாகவும் இருக்கும். எந்தவேலையையும் செய்யத் தோன்றாமல் சோர்வுடனே இருப்பீர்கள். நீங்கள் செய்ய வேண்டும் என்று முற்பட்டாலும் உடல் அதற்கு ஒத்துழைக்காது. இப்படியான அறிகுறிகள் இரும்புச் சத்துக் குறைபாட்டிற்கு முக்கிய காரணிகளாகும்.
 
உங்கள் சருமம் வெளிரிய நிறத்தில் இருக்கிறது அல்லது மஞ்சள் நிறத்தில் இருக்கிறது என்றாலும் இரும்புச் சத்துக் குறைபாடேக் காரணம். இப்படி வாயின் உள்பக்கம் இரத்த ஓட்டம் இல்லாமல் வெள்ளை நிறத்தில் இருத்தல், உதடு, விரல் நகங்கள் நன்கு வெள்ளை நிறத்தில் மாறுகிறதெனில் இரும்புச் சத்துக் குறைபாடே  காரணம்.
 
வழக்கத்திற்கு மாறாக திடீரென இதயத் துடிப்பு வேகமாகிறது என்றால் அதற்கு இரும்புச் சத்துக் குறைபாடுதான் காரணம். ஏனெனில் இரத்ததில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருந்தால் இதயம் ஆக்ஸிஜனை வெளியிட கூடுதலாக வேலை செய்யும்.
 
ஒரு இடத்தில் நிலையாக அமர்ந்திருத்தால் உடனே கால் மரத்து போகும். கால்கள் ஷாக் அடித்ததைப் போல் உணர்வீர்கள். அப்படி நீங்கள் அடிக்கடி உணர்கிறீர்கள் எனில் அது சாதாரண விஷயமல்ல. இரும்புச் சத்து போதுமான அளவு இல்லை என்பதே காரணம் ஆகும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்