ஜீரண பாதையில் உள்ள புண்களை சப்ஜா விதை ஆற்றக்கூடிய தன்மை கொண்டது. சிறுநீர் பாதையில் உண்டாகக்கூடிய புண்கள், சிறுநீரக எரிச்சல், சிறுநீர் தொற்று, வயிற்று புண் போன்ற பிரச்சனைகளை குணப்படுத்த சப்ஜா விதை மிகவும் உதவுகிறது.
சப்ஜா விதைகளை குறைந்தது 4 முதல் 6 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். நன்றாக ஊறிய சப்ஜா விதையானது நன்கு பூத்து வழவழப்பாக ஜவ்வரிசி போன்று இருக்கும். ஊறவைத்த சப்ஜா விதையுடன் ரோஸ் மில்க், நன்னாரி சர்பத், மில்க் ஷேக், பால், தண்ணீர் இவற்றில் எதில் வேண்டுமானாலும் சேர்த்து குடித்து வரலாம்.