செரிமானத்தை எளிதாக்க உதவுகிறதா சிறுதானியங்கள் !!

வியாழன், 2 ஜூன் 2022 (18:12 IST)
காய்கறிகளை மட்டும் உண்ணும் சைவப் பிரியர்கள் மிகவும் விரும்பும் உணவு சிறுதானியங்களாகும். ஏனெனில் சிறுதானியங்களில் உள்ள அதிகப்படியான புரதச்சத்து தான் இதற்கு காரணம்.


தினமும் உடலுக்கு தேவைப்படும் புரதச்சத்தின் அளவு இறைச்சி உணவுகளை விட சிறுதானியங்களில் அதிகமுள்ளது.

சிறுதானியங்களில் நார்ச்சத்து மிகுந்துள்ளது. எனவே சிறுதானியங்கள் செரிமானத்தை எளிதாக்க உதவுகிறது. சிறுதானியங்களில் மலமிளக்கி பண்புகள் மலச்சிக்கலுக்குச் சிறந்த தீர்வாக அமைகின்றன.

சிறுதானியங்களில் உள்ள லெசித்தின் மற்றும் மீத்தியோனின் கல்லீரலில் இருந்து தேவையற்ற கொழுப்பை வெளியேற்ற உதவுகின்றன.

நார்ச்சத்து அதிகமுள்ள உணவினை சாப்பிடுவதன் மூலம் பித்தப்பையில் கற்கள் உருவாவது தடுக்கப்படுகிறது. சிறுதானியங்கள் எளிதில் கரையாத நார்ச்சத்தை அதிகமாக்குகிறது. மேலும் பித்தப்பையில் கற்கள் உருவாகுவதற்குக் காரணமான பித்த அமிலங்களின் சுரப்பைக் குறைக்கிறது.

சிறுதானியங்கள் அதிகப் புரதச்சத்து மிகுந்த தானியமாகவும் மற்றும் அமினோ அமிலங்களில் ஒன்றான லைசினையும் கொண்டுள்ளது. இவை இரண்டும் தசைகள் சேதமடைவதை குறைத்து வலிமையான தசைகள் உருவாகுவதற்கு உதவுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்