உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்களை கொண்டுள்ள மக்காச்சோளம் !!

வியாழன், 2 ஜூன் 2022 (13:58 IST)
சோளம் குறைந்த அளவு கொழுப்பினை கொண்டது. இது இதய ஆரோக்கியத்திற்கு பயனுள்ளதாக இருக்கும்.


மக்காச்சோளத்தில் சரியான அளவில் கார்போஹைட்ரேட் மற்றும் கலோரிகளை கொண்டது. மக்காச்சோளத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான அனைத்து சத்துகளும் கிடைக்கும். மேலும் பார்வைக்கோளாறு ஏற்படாமல் தடுத்து கண்களை பாதுகாக்கும் தன்மை கொண்டது.

சோளத்தில் அதிக அளவு நார்சத்து நிறைந்துள்ளது. சோளத்தை பச்சையாகவோ அல்லது வேக வைத்தோ சாப்பிட்டால் நார்ச்சத்து முழுமையான அளவு நமது உடலுக்கு கிடைக்கும். சோளத்தில் இருக்கும் இந்த நார்ச்சத்து குடல், வயிறு புற்றுநோய்கள் ஏற்படாமல் தடுப்பதில் முக்கிய பங்காற்றுகிறது.

சோளத்தில் இருக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது. இதனால் ரத்த நாளங்கள், நரம்புகள் மற்றும் இதயத்திற்கு செல்லக்கூடிய நரம்புகள் போன்றவற்றில் கொழுப்புகள் படிந்து விடாமல் தடுத்து, சீரான ரத்த ஓட்டம் செல்வதை உறுதி செய்கிறது.

மக்காச்சோளத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கும். மேலும் பார்வைக்கோளாறு ஏற்படாமல் தடுத்து கண்களை பாதுகாக்கும் தன்மை கொண்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்