பலவகையான கீரைகளும் அதன் அற்புத பயன்களும் !!

வியாழன், 22 செப்டம்பர் 2022 (16:40 IST)
காசினிக்கீரை - சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கும்; உடல் வெப்பத்தை தணிக்கும். காசினிக் கீரையில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு சத்து, மற்றும் வைட்டமின் ஏ,பி,சி ஆகிய சத்துக்கள் உள்ளன. இதன் வேர் காய்ச்சலை குணமாக்கும் சக்தி கொண்டது.


இரத்தத்தை சுத்தம் செய்து, இரத்தத்தை விருத்தி செய்யும் மூலச்சுட்டை தணிக்கும். உயிர்ச்சத்துக்கள் கொண்டது. எனவே உடலுக்கு நல்லதைச் செய்யும்.

மஞ்சள் கரிசாலை - கல்லீரலை பலமாக்கும்; காமாலையை விலக்கும். முழுத்தாவரமும் மருத்துவத்தில் பயன்படும். மஞ்சள் காமாலை தீர பசுமையான கரிசலாங்கண்ணி இலைகளைச் சுத்தம் செய்து, பசையாக அரைத்து, கொட்டைப்பாக்கு அளவு, ஒரு டம்ளர் மோரில் கலந்து, உள்ளுக்கு சாப்பிட்டுவர வேண்டும்.

பசலைக்கீரை - தசைகளை பலமடையச் செய்யும். மலச்சிக்கல், தொந்தி போன்றவற்றுக்கும் இந்தக் கீரை நல்லதொரு நிவாரணி. கால் மூட்டுகளில் வரக் கூடிய வாதத்தை போக்கக்கூடியது. கீரையின் சாறு, முகப்பருக்களை நீக்கக்கூடியது.

புதினாக்கீரை - ரத்தத்தை சுத்தமாக்கும்; அஜீரணத்தைப் போக்கும். ஆஸ்துமாவையும் புதினாக் கீரை கட்டுப்படுத்துகின்றது. மஞ்சள் காமாலை, வாதம், வறட்டு இருமல், சோகை, நரம்புத் தளர்ச்சி ஆகியவற்றுக்கும் புதினாக் கீரை சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.

வல்லாரைக் கீரை - மூளைக்கு பலம் தரும். வல்லாரை கீரையில் இரும்புசத்து, சுண்ணாம்புசத்து,  தாதுஉப்புக்கள் உயிர்சத்து, விட்டமின் A,C அதிகம் உள்ளது. மூளைவளர்ச்சிக்கும், ஞாபக சக்திக்கும் உதவுகிறது.

முளைக்கீரை - பசியை ஏற்படுத்தும்; நரம்பு பலமடையும். முளைக்கீரையில் வைட்டமின்களும், தாது உப்புக்களும் அதிக அளவில் இருக்கின்றன. குறிப்பாக சுண்ணாம்புச் சத்து இந்த கீரையில் நிறைய இருக்கிறது. மலச்சிக்கல் உள்ளவர்கள் இந்தக் கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்