வில்வ மரத்தின் இலைகள், கொட்டைகள், பட்டை, பூக்கள், பழம் மற்றும் குச்சி ஆகிய இவை அனைத்துமே மருத்துவ பயன் கொண்டவை.
வில்வப்பழங்கள் கோடைக்காலத்தில் பழுக்கும் தன்மை கொண்டது. இதன் தோல் பகுதி வழவழப் பாகவும், கெட்டியாகவும் இருக்கும். அதற்குள் கெட்டியான சதைப்பகுதி இருக்கும். வில்வம் காய் பழமாக மாறும் போது சதைப்பகுதி மெதுவாகவும், இனிப்பானதாகவும் மாறிவிடும்.
வில்வ இலை மலத்தைக் கட்டுப்படுத்தும். வயிற்று வலியைப் போக்கும். எல்லாவிதமான மேக நோய்க்கும் வில்வம் அரும் மருந்தாக உள்ளது. எல்லா விதமான காய்ச்சலையும் போக்கும் தன்மை கொண்டது. வில்வப் பழம் பித்த சம்மந்தமான நோய்களுக்கு நல்ல மருந்தாக விளங்குகிறது. வில்வத்தின் இளம் தளிர் இலைகளை லேசாக வதக்கி இளஞ்சூட்டில் ஒத்தடம் கொடுக்கக் கண்வலி, கண் சிவப்பு, அரிப்பு என அனைத்தும் குணமாகும்.