மங்குஸ்தானில் தயாமின், நியாசின், போலேட் போன்றவை அதிக அளவில் காணப்படுகின்றன. கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு போன்றவற்றின் வளர்ச்சியை மாற்றும் பணிகளில் இந்த வைட்டமின்கள் அதிக அளவில் உதவுகின்றன.
மங்குஸ்தான் பழத்தில் நார்ச் சத்து அதிகளவு உள்ளது. மங்குஸ்தான் பழங்களை அதிகம் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனைகள் நீங்கும். கண்களின் பார்வைத் திறன் தெளிவாக இருக்க வைட்டமின் A, அஸ்கார்பிக் அமிலம், நிகோடினிக் அமிலம் போன்றவை மிகவும் முக்கியம்.