வயிறு சம்பந்தப்பட்ட வியாதிகளை போக்கும் கறிவேப்பிலை !!

Webdunia
புதன், 4 மே 2022 (19:13 IST)
நாட்டுக்கறிவேப்பிலை, காட்டுக்கறிவேப்பிலை என்ற இரு வகையாகும். நாட்டுக் கறிவேப்பிலை உணவாகவும், காட்டுக்கறிவேப்பிலை மருந்தாகவும் பயன்படுகிறது.


காட்டுக் கறிவேப்பிலையின் இலை சற்றுப் பெரிதாகவும் கசப்பு அதிகம் உள்ளதாகவும் இருக்கும். நாட்டுக் கறிவேப்பிலை இலை அதனைவிடச் சிறிதாகவும், இனிப்பும், துவர்ப்பும் நறுமணமும் உள்ளதாக இருக்கும்.

கறிவேப்பிலையின் இலை, ஈர்க்கு,பட்டை, வேர் முதலியன உணவாகவும் மருந்தாகவும் பயன்படுகிறது. கருவேப்பிலை சாப்பிட்டால் கண் பார்வைக்கோளாறு உங்களை அணுகாது. எலும்புகள் பலப்படும் சோகை நோய் வரப்பயப்படும்.  புண்கள் விரைவில் ஆற கறிவேப்பிலை உதவுகிறது.

வாய்ப்புண் உள்ளவர்கள் கருவேப்பிலை சாப்பிட்டால் வாய்ப்புண் ஆறிவிடும்.  வயிறு சம்பந்தப்பட்ட வியாதிகளைப்போக்கும் குணம் கருவேப்பிலைக்குண்டு. மலச்சிக்கலைப் போக்கும், ஜீரணசக்தியைக்கூட்டும், பேதியைக் கட்டுப்படுத்தும். பித்தத்தைக் கட்டுப்படுத்தி வாந்தி யைத்தடுத்து வயிற்றில் ஏற்படும் வயிற்று இரச்சலைத்தடுக்கும்

சக்கரை வியாதிக்கு நல்ல மருந்து இதன் இலை சாறு என கண்டறியப்பட்டுள்ளது இதன்  ஈர்க்கு, இலை பட்டை வேர் முதலியை யாவும் மருத்துவ குணம் உடையவை.

ஈர்க்கு, இலை பட்டை வேர் இவைகளை கஷாயம் வைத்து சாப்பிட்டால் பித்தம் ,வாந்தி முதலியவை நீங்கும். இதன்  .ஈர்க்கு சுக்கு, சீரகம், ஓமம் இவைகளை தலா 24  கிராம் எடுத்து இரண்டு  லிட்டர்  சுத்தமான  தண்ணீரில் கொட்டி கால் படியாகும் வரை சண்ட காய்ச்சி பின் சிறிது சக்கரை சேர்த்து கலை மாலை இரண்டு வேளை அருந்த வேண்டும்.

குடல் வாயுவுக்கு கைகண்ட மருந்து கறிவேப்பிலை.  இதன் இலையை அரைத்து காலை மாலை கொட்டப்பாக்கு அளவு முன்று நாளுக்கு சாப்பிட்டால் சீதபேதி குணமாகும். உள்சூடு குறையும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்