கார்போஹைட்ரேட் மற்றும் புரதம் நிறைந்து காணப்படும் மக்காச்சோளம் !!

வெள்ளி, 25 பிப்ரவரி 2022 (11:40 IST)
இயற்கை உணவான மக்காச்சோளம் நீரிழிவு ஏற்படுவதற்கான ஆபத்தை குறைக்கிறது. கார்போஹைட்ரேட் மற்றும் புரதம் நிறைந்து காணப்படுவதால் மன அழுத்தத்தை தடுக்கிறது.


மஞ்சள் நிறம் கொண்ட மக்காச்சோளம், குரல்வளைவில் ஏற்படக்கூடிய நோய் அபாயத்தை தவிர்க்கிறது,  மேலும் பார்வைக்கோளாறு ஏற்படாமல் கண்களை பாதுகாக்கிறது.

கர்ப்பிணி பெண்களுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளில் மக்காச்சோளம் ஒன்று. கர்ப்பிணி பெண்கள் தங்களின் வழக்கமான உணவாக சோளத்தை உட்கொள்ள வேண்டும் என்று சுகாதார நிபுணர்கள் ஆலோசனை வழங்குகின்றனர்.

மக்காச்சோளம் குறைந்த அளவு கொழுப்பினை கொண்டுள்ளதால் இதய ஆரோக்கியத்திற்கும் பயனுள்ளதாக இருப்பதோடு, இதயம் சம்பந்தபட்ட நோய்களையும் எதிர்க்க உதவிபுரிகிறது.

சோள மாவை அழகு, சமையலுக்கு பயன்படுத்துவதோடு மட்டுமல்லாமல், தோல் தடித்தல், எரிச்சல் ஏற்படக்கூடிய இடத்தில் பயன்படுத்தினால் தோல் சம்பந்தபட்ட பிரச்சனைகளை சரிசெய்யலாம்.

சிறுநீரை அதிகமாகப் பெருக்கும் சக்தி இதற்கு இருப்பதால், உடம்பில் உள்ள உப்பைக் கரைக்கும் தன்மை உண்டு. கண் குறைபாடுகளை சீர் செய்யும் பீட்டா கரோட்டின், இதில் அதிகமாக உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்