ஜீரண மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும் ஏலக்காய் !!

வெள்ளி, 25 பிப்ரவரி 2022 (09:51 IST)
ஏலக்காய் தண்ணீரை நீங்கள் தொடர்ந்து குடித்து வரும்பொழுது அது இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும்.


ஏலக்காய் தண்ணீரைக் குடிப்பது செரிமான அமைப்பை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல் வயிற்று வலியை போக்கி உங்களுடைய உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. ஏலக்காய் தண்ணீரை நீங்கள் தொடர்ந்து குடித்து வரும்போது அது உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும்.

ஏலக்காயில் அதிகளவில் இருக்கக்கூடிய ஆன்டி-ஆக்சிடன்ட்கள் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. அதுமட்டுமில்லாமல் சிறுநீர் சரியான அளவில் வெளியேறுவதற்கு ஏலக்காய் உதவுகிறது.

ஏலக்காய் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் தன்மை கொண்டது. ஏலக்காயில் இருக்கக்கூடிய கலவைகள் புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராட உதவுகிறது.

அல்சர் உட்பட செரிமான பிரச்சனைகளை போக்குகிறது ஏலக்காய். ஜீரண மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்து ஜீரணத்தை சரிப்படுத்த ஏலக்காய் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.

ஏலக்காயை தொடர்ந்து பயன்படுத்தி வரும் பொழுது அது வாய் துர்நாற்றத்தை போக்குகிறது. இதற்கு காரணம் வாயில் துர்நாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடி அதை சிறந்த முறையில் நீக்குகிறது ஏலக்காய்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்