இரத்தத்தில் உள்ள கொழுப்பை கட்டுப்படுத்தும் இலவங்கப்பட்டை !!

புதன், 23 மார்ச் 2022 (14:27 IST)
அசைவ சமையல் மட்டுமல்லாமல், சைவம் சார்ந்த சமையல்களில் நாம் அவ்வபோது பயன்படுத்தும் இலவங்கப் பட்டை ஆண்களுக்கு மகத்தான பலன்களை கொடுக்கக் கூடியவை.


இலவங்கப் பட்டையில் மெக்னீசியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், கார்போஹைட்ரேட், புரதம், கால்சியம், மேங்கனீஸ், காப்பர், ஜிங்க், விட்டமின்கள், நியாசின், தியமின் மற்றும் லைகோபீன் என எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.

இலவங்கப் பட்டை, வயிறு சம்பந்தமான வயிற்றுப் பொருமல், அஜீரணம், நெஞ்செரிச்சல், வயிற்று வலி என அனைத்துவித நோய்களுக்கும் நிவாரணியாக கருதப்படுகிறது. பூஞ்சைக் காளானால் வரும் நோய்களையும் குணப்படுத்துகிறது என்று ஆராய்ச்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரத்த ஓட்டத்தை செம்மைப்படுத்தும். இலவங்கம் கீல்வாதம், மூட்டுவலி, தசைவலியை சரிசெய்யும். அதுமட்டுமல்ல மூளையின் நினைவுப் பெட்டகத்தை நன்கு பணிபுரிய வைக்குமாம். உடல் கொழுப்பைக் குறைக்குமாம்.

தினம் காலை 1/2 தேக்கரண்டி பட்டை பொடி, 1 தேக்கரண்டி தேன் கலந்து சாப்பிட்டால் , அது நாள்பட்ட மூட்டு வலியை நன்கு குணப்படுத்துமாம்.

ஒருவர் தினம் 1/2 தேக்கரண்டி இலவங்கப் பட்டை பொடி சாப்பிட்டால், அது கொழுப்பைக் கட்டுப்படுத்தும். ஆராய்ச்சியில், பட்டை, இரத்த புற்றுநோய், குடல் புற்று மற்றும் தசை புற்றுநோயைக் குறைக்கிறது எனவும், இரத்த கொலஸ்டிரால், சர்க்கரை நோயினைக் குறைக்கும் எனவும் கண்டறியப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்