சப்பாத்திக் கள்ளியினுடைய இலை, பூ, பழம், தண்டு என அனைத்து பகுதியினையும் சமைத்தோ அல்லது சாறாக பிழிந்தோ உணவாகவும், மருந்தாகவும் பயன்படுத்தலாம்.
சப்பாத்திக்கள்ளி, வைட்டமின் சி, மெக்னீசியம், கால்சியம், பொட்டாசியம் போன்ற எண்ணற்ற சத்துக்களை தன்னகத்தை உள்ளடக்கி, நம் ஆரோக்கியத்துக்கு உதவுகிறது.
சப்பாத்திக்கள்ளி சத்தூட்டம் நிறைந்துள்ள உணவாக இருப்பதாகவும், இரண்டாம் நிலை சர்க்கரை நோயாளிகளின் ரத்தத்தில் சேர்ந்திருக்கும் சர்க்கரையின் அளவை குறைக்கவும் உதவும் என்பது சில ஆய்வுகளின் மூலம் தெரிய வந்துள்ளது.
சப்பாத்திக்களியை உணவாக பயன்படுத்துவதால், கொழுப்புச்சத்து குறைந்து உடல் உறுப்புகள் பலம் பெற்று, சீராக இயங்க வழி ஏற்படுகிறது.