இதய ஆரோக்கியத்தை காக்க உதவும் காலிபிளவர் !!

புதன், 15 டிசம்பர் 2021 (18:00 IST)
காலிபிளவரில் மெக்னீசியம், பொட்டாசியம், கால்சியம், நார்ச்சத்து, வைட்டமின்கள் அதிகம் உள்ளது. இதில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலை நீக்கி செரிமான கோளாறுகளை சரி செய்யும்.

காலிபிளவர் புற்று நோய் ஏற்படாமல் தடுக்கும் சக்தி உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. காலிஃப்ளவரில் சல்போரபேன் என்ற வேதிப்பொருள் அதிகமாக உள்ளது. இது புற்று நோய்களின் செல்களின் அடிப்படை வளர்ச்சியை அழிக்கிறது.
 
காலிபிளவரில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளதால் இது ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்கும். இதனால் இதயத்திற்கு செல்லும் ரத்த குழாய்களில் அடைப்பு ஏற்படாமல் தடுத்து இதயத்தை ஆரோக்கியமாக வைத்து கொள்ள உதவுகிறது.
 
காலிஃப்ளவரில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. மேலும் நார்ச்சத்துள்ள உணவு இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கும் என்பதை ஆய்வுகளில் தெரிய வந்துள்ளன.
 
காலிஃப்ளவரில் உள்ள சல்போராபேன் என்ற சேர்மம் இரத்த அழுத்த அளவை கணிசமாக மேம்படுத்துவதாகவும் அறியப்படுகிறது.
 
காலிஃப்ளவரில் உள்ள ஒரு முக்கியமான அழற்சி எதிர்ப்பு கலவை இண்டோல் -3-கார்பினோல் ஆகும். இது வீக்கத்தை எதிர்த்துப் போராடுவதற்கு மரபணு அளவில் செயல்படுகிறது. மேலும் காலிபிளவரில் உள்ள ஒமேகா -3 கொழுப்பு அமிலங்களும் அழற்சி நிலைகளை எதிர்த்துப் போராட உதவுகின்றன.  
 
காலிஃப்ளவரில் உள்ள சல்போராபேன், வைட்டமின் சி மற்றும் ஃபோலேட் ஆகியவற்றுடன் சேர்ந்து எடை இழப்புக்கு உதவுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்