சீயக்காய் பயன்படுத்துவதால் தலைப்பகுதியில் உள்ள சருமம் வறண்டு போகாமல் ஈரப்பதத்துடன் இருக்கும். முடியின் அமில, கார சமநிலை சீராகும். பொடுகு நீங்கும். சொறி, சிரங்கு, கொப்புளங்கள் போன்ற சரும பிரச்சினைகள் குணமாகும்.
தலையில் தேங்காய் எண்ணெய் தடவி மசாஜ் செய்த பின்பு, சீயக்காயைப் பயன்படுத்தலாம். இதன் மூலம் கூந்தல் உதிர்வது, இளநரை, அரிப்பு போன்ற பிரச்சினைகள் தீரும்.
செம்பருத்தி, வெந்தயம், பூலாங்கிழங்கு, எலுமிச்சை பழத் தோல், பச்சை பயறு, காய்ந்த நெல்லி, ஆவாரம் பூ ஆகியவற்றை சீயக்காயுடன் கலந்து பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும்.