வாகனங்களில் பயணிக்கும்போது தலைசுற்றல், வாந்தி, மயக்கம் போன்றவை ஏற்படுபவர்கள் இரண்டு ஏலக்காயை வாயில் போட்டு மென்று கொண்டிருந்தால் இந்த தொல்லை ஏதும் ஏற்படாது.
ஜலதோஷம், இருமல், தொடர்ச்சியான தும்மலால் அவதிப்படுகிறவர்கள் ஏலக்காய் கஷாயம் பருகவேண்டும். ஏலக்காயில் தயாரிக்கப்படும் எண்ணெய் சரும நலனுக்கு ஏற்றது. குழந்தைகளுக்கு மசாஜ் செய்யும் எண்ணெய்யில் சிறிதளவு கலந்து பயன்படுத்தலாம்.
நெஞ்சில் சளி கட்டிக் கொண்டு மூச்சு விட சிரமப்படுபவர்களும், சளியால் இருமல் வந்து, அடிக்கடி இருமி வயிற்றுவலி வந்தவர்களுக்கும் கூட ஏலக்காய் நல்ல மருந்தாக அமையும்.
வயிற்றில் ஜீரண அமிலங்களின் சமநிலையின்மை, வாயு தொல்லை, அஜீரணம், மலச்சிக்கல் போன்ற அணைத்து பிரச்சனைகளும் நீங்க சிறிதளவு ஏலக்காய்களை சர்க்கரையுடன் சேர்த்து நன்கு பொடித்து, தினமும் காலையில் பசும்பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் வயிறு சார்ந்த அனைத்து பிரச்சனைகளும் தீரும்.