நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் தரும் இஞ்சி !!

வெள்ளி, 13 மே 2022 (13:10 IST)
இஞ்சி செடியின் வேரைத்தான் நாம் இஞ்சியாக சாப்பிடுகிறோம். இதில் ஜிஞ்சரால், ஜிஞ்சிபெய்ன், மாவுசத்து, புரோட்டீன் அதிகம் உண்டு.


இஞ்சியில் உள்ள காரத்தன்மை புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை அழித்து புற்றுநோய் வரவிடாமல் பாதுகாக்கிறது. ஆண்கள் இஞ்சி சாறை பருகினால் புரோஸ்டேட் என்ற புற்றுநோய் வராது.

இஞ்சியில் உள்ள ஃபீனால் மற்றும் ப்ளேவோனாய்டுகள் நரம்பு மண்டலத்தை பாதுகாக்கும். மூளைக்கு புரோட்டின் அளவை அதிகரிக்கச் செய்து மூளையின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும். இதனால் மூளை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வருவது தடுக்கப்படுகிறது.

இஞ்சிச் சாறு ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துவதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் ஒரு டம்ளர் இஞ்சி சாறு பருகி வந்தால் நீரிழிவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம்.

இஞ்சி சாறு பருகி வந்தால் செரிமான பிரச்சனை நீங்கி நல்ல பசியை ஏற்படுத்தும். மேலும் வயிற்றுப் போக்கு, நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் தரும்.

இஞ்சி, உப்பு, சீரகம் மூன்றையும் ஒன்றாகக் கலந்து அரைத்துச் சாப்பிட்டு சுடுநீர் குடித்தால் வயிறு உப்புசம் குணமாகும். இஞ்சி, மாங்காய் இரண்டையும் சேர்த்துச் சாப்பிட்டால் இழுப்பு, காய்ச்சல், விக்கல் ஆகியவை குணமாகும்.

இஞ்சியைக் காயவைத்துப் பொடி செய்து தண்ணீரில் குழைத்து நெற்றியில் தடவினால் தலைபாரம், ஜலதோஷம் போன்றவை குணமாகும். இஞ்சிச் சாற்றில் நல்லெண்ணெய் கலந்து காய்ச்சி தலைக்குத் தேய்த்துவந்தால் தலைவலி குணமாகும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்