செம்பு பாத்திரத்தில் வைக்கப்படும் நீரின் நன்மைகள் !!

Webdunia
செம்பு பாத்திரத்தில் உணவு சமைத்தும் பயன்படுத்தி வந்தால், விந்தணு உற்பத்தியும் அதிகமாகும். இதைத் தவிர செம்பின் ஏன்டி-பாக்டீரியல் மற்றும் ஏன்டி- வைரல்  தன்மைகள், உடலில் ஏற்பட்டுள்ள புண்களை விரைவாகக் குணமடையச் செய்கிறது. 

செம்பு இயற்கையாகவே இளமையைத் தக்க வைக்க உதவுவதுதான். இதில் இடம்பெற்றுள்ள ஏன்டி-ஆக்ஸிடன்ட்கள் முகத்தில் தோல் சுருங்குவதைத் தடுப்பதுடன், கருவளையங்கள் உருவாவதையும் அறவே தடுக்கிறது. உடல் மற்றும் சருமத்திற்கு சீரான ரத்த ஓட்டத்தை அளிப்பதுடன், தோலுக்கு புதுப் பொலிவையும்  கொடுக்கிறது. 
 
செம்பு பாத்திரத்தில் சேகரித்த தண்ணீரைத் தொடர்ந்து பருகி வந்தால், உடல் எடை குறைந்துவிடும். மேலும் வயிற்றில் உள்ள உடலுக்கு தீங்கு விளைவிக்கும்  பாக்டீரியாக்களை செம்பு அழித்துவிடும்.
 
செம்பு உடலில் சேரும்போது இரத்தசோகை பிரச்சனையை கட்டுப்படுத்துகிறது. தைராய்டு செயல்பாட்டை ஒழுங்குப்படுத்தும் அரியக் கனிமம் தாமிரம். தைராய்டு  சுரப்பி சீராக செயல்பட இது அதிமுக்கியமானதாக கருதப்படுகிறது. 
 
குறிப்பு: செம்பு பாத்திரத்தின் உட்பகுதியை எலுமிச்சை கலந்த தண்ணீர், வினிகர், சமையல் சோடா ஆகியவற்றைக் கொண்டு சுத்தம் செய்வது நல்லது. இவ்வாறு  சுத்தம் செய்துவிட்டு 8 மணிநேரம் அப்படியே வைத்துவிடவேண்டும். அதன் பிறகு பயன்படுத்த ஆரம்பிக்க வேண்டும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்