சமையலில் அதிகம் பயன்படுத்தப்படும் சாரபருப்பின் நன்மைகள் !!

வியாழன், 30 ஜூன் 2022 (10:26 IST)
சாரபருப்பு பயரின் அளவு சற்று தட்டையானது மற்றும் பாதாம் போன்ற சுவை கொண்டது. இவற்றை பச்சையாகவே சாப்பிடலாம்.


உணவின் சுவையை அதிகபடுத்துவதால் அவை பெரும்பாலும் வறுக்கப்படுகின்றன. அல்வா, பாயசம், மைசூர் பாக் போன்ற இனிப்பு வகைகளில் சாரைப் பருப்பு சேர்க்கப்படுகிறது.

சார பருப்பில் புரதம், கொழுப்பு, கால்சியம், நார்ச் சத்து, இரும்பு, பாஸ்பரஸ், மெக்னீஷியம், தாமிரம், துத்தநாகம் மற்றும் வைட்டமின் - பி காம்ப்ளெக்ஸ் ஆகியவை அதிக அளவில் இருக்கின்றன.

சருமத்திற்கும் கூந்தலுக்கும் நன்மை பயக்கும். மேலும் க்ளீட் போன்ற பல பிறப்புறுப்பு மற்றும் சிறுநீர் பிரச்சினைகளுக்கு அவை பயனுள்ளதாக இருக்கும்.

சாரபருப்பில் கலோரிகள் குறைவாக உள்ளன, ஆனால் புரதம் மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளன. இது உங்களுக்கு அடிக்கடி பசி ஏற்படுவதை தடுக்கும். இதனால் அடிக்கடி சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் தோன்றாது.

சாரபருப்புலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்கிறது மற்றும் கருமையான புள்ளிகள் மற்றும் கறைகளை நீக்க உதவுகிறது.

சாரபருப்பு குடல் இயக்கங்களை முறைப்படுத்த உதவும். இது மலச்சிக்கல்  ஏற்படாமல் தடுக்கிறது. வயிற்றுப்போக்கை குணப்படுத்துகிறது. வயிற்றுப் பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்