கத்தரிக்காயில் அதிக அளவு நார்ச்சத்து இருப்பதனால் உடலில் உள்ள செரிமான மண்டலத்தைப் பாதுகாக்கிறது. கத்தரிக்காயில் இருக்கக்கூடிய ரசாயனங்கள், உடலில் இருக்கக்கூடிய கழிவுகள் அதாவது டாக்ஸின்களை எளிதில் வெளியேற்றுகின்றன.
கத்தரிக்காயில் உள்ள விட்டமின் கே, இரத்தக் கட்டிகள் உருவாவதைத் தவிர்க்கிறது. இரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்துகிறது. இதில் இரும்பு, கால்சியம் போன்ற தாதுக்கள் அதிக அளவு உள்ளது.