வெண்டைக்காயில் புரதம், கொழுப்பு, நார்ச்சத்து கார்போஹைட்ரேடு, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, மெக்னிசியம், பொட்டாசியம், சோடியம், தாமிரம் போன்றவை அதிகமாக உள்ளன. அதனால் வெண்டைக்காய் நீரை தினமும் பருகுவதன் மூலம் பல்வேறு உடல் நல பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
வெண்டைக்காயை தண்ணீரில் வெறுமனே ஊறவைத்து அந்த தண்ணீரை பருகி வரலாம். அப்படி பருகுவதன் மூலம் உடல் எடையை கட்டுக்குள் கொண்டு வரலாம். கொழுப்பை குறைக்கலாம். நீரிழிவு நோய், இதய நோய் போன்றவற்றை கட்டுப்படுத்தலாம்.
வெண்டைக்காய் நீரில் இருக்கும் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நாள் முழுவதும் உடலை உற்சாகமாக வைத்துக்கொள்ள வழிவகை செய்யும். அதனால் சோர்வு இல்லாமல் சுறுசுறுப்பாக செயல்படலாம். அடிக்கடி உடல்சோர்வு, சோம்பல் பிரச்சனையை எதிர்கொள்பவர்கள் வெண்டைக்காய் தண்ணீர் பருகிவரலாம்.