பீன்ஸ் காயில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் அதிகம் இருக்கின்றன. இது உடலில் சிவப்பு ரத்த அணுக்கள் பிராண வாயுவை கிரகிக்கும் தன்மையை அதிகப்படுத்துகிறது. இதனால் உடலுக்கு அதிக உற்சாகமும், எளிதில் உடல் சோர்வு அடையாத நிலையை தருகிறது.
பீன்ஸ் ரத்த ஓட்டத்தை சீராக்கி உடம்பு ஆரோக்கியமாக இருப்பதற்கு உதவி புரிகிறது. ரத்தத்தில் வெள்ளை அணுக்கள் குறைபட்ட நீக்கி ரத்தசோகையை குணப்படுத்துகிறது. மேலும் ரத்தத்தில் இருக்கும் நச்சுப் பொருள்களையும் நீக்கி, சுத்திகரிப்பு செய்து உடலை ஆரோக்கியமாக வைக்கிறது.