உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை தரும் வாழைப்பழம் !!

சனி, 5 பிப்ரவரி 2022 (18:21 IST)
தினமும் வாழைப்பழம் எடுத்துக்கொள்வதால் இதில் இருக்கும் பாஸ்பரஸ், நைட்ரஜன் சத்துக்கள் உடலிலுள்ள திசுக்களை மறுசீரமைப்பு செய்து இளமையாகவும், உடல் பலமாகவும் இருக்கும்படி செய்கிறது.


மலச்சிக்கலைப் போக்கும் சக்தி பூவன் பழத்திற்கு அதிகமாக உண்டு. மலச்சிக்கல் உள்ளவர்கள் மலை வாழைப்பழத்தை எடுத்துக்கொண்டால் இது உடலில் ரத்தத்தை உற்பத்தி செய்வதோடு மலச்சிக்கல், பித்தம், உடல் சூடு போன்றவற்றை போக்குகிறது.

வாழைப்பழத்தில் அதிகமான மாவு சத்து இருப்பதால் சிறுநீரகம் சம்பந்தமான பிரச்சனைகள் வராமல் பாதுகாக்கிறது.

வாழைப்பழத்தில் பொட்டாசியம் சத்து இருப்பதால் உடலில் இருதயம் சம்பந்தமான நோய்கள் வராமல் பாதுகாக்கிறது. குறிப்பாக இதயத்திற்கு செல்லும் ரத்த குழாய்களில் எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் சீராக இயங்க உதவுகிறது.

வாழைப்பழத்தில் இருக்கும் வைட்டமின் சி மாங்கனீஸ் உப்புடன் சேர்ந்து உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்