அதிகமாக பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகளில் ஒன்று வெள்ளைப்படுதல் இதனை அவுரி மூலிகை கொண்டு உடனே சரிசெய்யலாம். யானை நெருஞ்சில், அவுரி இலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து எலுமிச்சைப்பழம் அளவு எடுத்து மோரில் கலந்து பத்து நாட்களுக்கு காலைவேளையில் தொடர்ந்து சாப்பிட்டு வர வெள்ளைப்படுதல் குணமாகும்.
அவுரி இலை, மஞ்சள் கரிசலாங்கண்ணி, வெள்ளை கரிசலாங்கண்ணி, செருப்படை, கோட்டைக்கரந்தை ஆகிய இலைகளை சம அளவு எடுத்து நன்றாக காயவைத்து அரைத்து பொடி செய்துவைத்துக்கொண்டு காலை, மாலை இருவேளை ஒரு தேக்கரண்டி அளவு வீதம் தேனில் குழைத்து சாப்பிட்டு வர பெண்களுக்கு கர்ப்பபை தொடர்பான பிரச்சினைகள், முறையற்ற மாதவிடாய் பிரச்சினைகள் தீரும். 45 நாட்களுக்கு தொடர்ச்சியாக சாப்பிடவும்.
மருதாணி இலை, அவுரி இலை இரண்டையும் காயவைத்து தனித்தனியாக அரைத்து பொடி செய்து வைத்துக்கொள்ளவும். இரவு மருதாணி பொடியை தண்ணீரில் கலந்து வைத்து காலையில் தலையில் தேய்த்து ஒரு மணிநேரம் கழித்து அலசிவிட்டு தலைமுடியை உலரவிட வேண்டும். பிறகு அவுரி இலை பொடியை தண்ணீரில் கலந்து தலையில் பூசி ஒரு மணி நேரம் மீண்டும் ஊறவைத்து அலசவேண்டும். இப்படி மாதம் ஒரு முறை செய்தால் போதும் நரை முடி கருப்பாக மாறும்.
அவுரி இலை, பெருங்காயம், மிளகு சம அளவு எடுத்து அரைத்து சுண்டக்காய் அளவு சாப்பிட கீல்வாதம், வாயு ஆகியவை குணமாகும்.