மருத்துவ பயன்கள் நிறைந்த அம்மான் பச்சரிசி !!

அம்மான் பச்சரிசி முழுத்தாவரமும் மருத்துவத்தில் பயன்படுகின்றது. துவர்ப்பு மற்றும் இனிப்புச் சுவையானது. குளிர்ச்சித் தன்மையானது. 

அம்மான் பச்சரிசி பாலை முகத்தில் தடவ, முகப்பரு, எண்ணெய் பசை ஆகியவை மாறும். ஆஸ்த்துமா, வாய்ப்புண் ஆகியவற்றுக்கான மருத்துவத்திலும் அம்மான் பச்சரிசி துணை மருந்தாகப் பயன்படுகின்றது. 
 
அதிக அளவில் உட்கொண்டால் வாந்தியைத் தூண்டும். ஆஸ்துமா, வாய்ப்புண் ஆகியவற்றுக்கான மருத்துவத்திலும் அம்மான் பச்சரிசி துணை மருந்தாகப்  பயன்படுகின்றது.
 
இதன் பூக்களை மைய அரைத்து அல்லது பூக்களை நேரடியாக படும் பாலுடன் சேர்த்து காய்ச்சி பருக தாய்ப்பால் நன்கு சுரக்கும். இதனை கூட்டு, துவையல், பொரியல் செய்து உண்பதால் உடலில் ஏற்படும் புண்கள், மலச்சிக்கல் நரம்பு வீக்கம், நாவறட்சி, உடல் வறட்சி நீங்கும்.
 
அம்மான் பச்சரிசி இலைகளை நன்கு மைய அரைத்து மோருடன் கலந்து கொடுக்க பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் தொந்தரவுகள், வெள்ளைப்படுதல் நீங்கும்.
 
இரத்தக் கழிச்சல் குணமாக அம்மான் பச்சரிசி இலைகளை அரைத்து, எலுமிச்சம்பழ அளவு, 200 மி.லி. பசும்பாலுடன் கலந்து, தினமும் காலையில் மட்டும் மூன்று நாட்கள் குடிக்க வேண்டும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்