துளசியின் அற்புத குணங்களும் அதன் பயன்களும்...!!

சளித்தொல்லைக்கான நிவாரணத்தையும் தன்னுள் வைத்துள்ளது துளசி. உடலில் வெப்பத்தை உண்டாக்கி கோழையை அகற்றுவதுடன், உடலில் உள்வெப்பத்தை ஆற்றும் குணமும் இதற்கு உண்டு. 
துளசி இலைகளை, வெயிலில் நன்கு உலர்த்தி பொடி செய்து, ஒரு தேக்கரண்டி அலவு சுத்து தேனில் குழைத்து சாப்பிட்டால் பூச்சி,  வண்டுக்கடி காரணமாக ஏற்படும் விஷம் மாறும்.
 
துளசி இலைகளை காய வைத்து இடித்து தயார் செய்த கஷாயத்துடன் தேன், பசுவின் பால் கலந்து உண்டால் கணையச் சூடு அகலும்.
 
துளசி சார்றில் சம அளவு தேன் கலந்து கலந்து ஐந்து நாட்கள் உட்கொள்ள, வாயு தொடர்பாக ஏற்படும் நோய்கள் குணமாகும்.
 
துளசி இலையை எலுமிச்சை சாறு விட்டு விழுது போல் அரைத்து, தோல் நோய்களுக்கு பற்றுப் போடலாம். இதனால் சொரி, சிரங்கு  போன்றவை குணமாகும். 
 
துளசி இலையுடன், அம்மான் பச்சரிசி இலையை சம அளவு எடுத்து அரைத்து பருக்கள் உள்ள இடத்தில் தடவினால் முகப்பரு மறையும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்