கரும்பு சாறு அருந்துவதால் கிடைக்கும் அற்புத பலன்கள் !!

கரும்பு ஏராளமான தாது சத்துகளை தன்னுள்ளே கொண்டுள்ளது. கரும்பு சாறு பருகும் நபருக்கு உடலில் சீக்கிரத்திலேயே புத்துணர்ச்சியும், உற்சாகமும் தருகிறது. உடனடி ஆற்றளுக்கு ஒரு சிறந்த உதாரணமாக கரும்பு சாறு இருக்கிறது. அடிக்கடி கரும்பு சாறு பருகினால் உடல் மற்றும் மனம் மிகுந்த உற்சகமாகவும், சுறுசுறுப்பாகவும் இயங்கும்.

வாய் துர்நாற்றம் மற்றும் பல் சிதைவு வயிற்றில் பிரச்சனை இருக்கும் நபர்களுக்கு வாய் துர்நாற்ற பிரச்சனை ஏற்படவே செய்யும். வாய் துர்நாற்றம் அதிகம் இருக்கும் பச்சத்தில் தினமும் கரும்பை பச்சையாக சாப்பிடவோ அல்லது கரும்பு சாற்றையோ பருக வேண்டும். 
 
கரும்பு, கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற கனிமங்களை கொண்டிருக்கிறது, இது உங்கள் பற்களின் பற்சிப்பியை உருவாக்க உதவுகிறது. வாய் துர்நாற்ற பிரச்சனையையும் போக்குகிறது. செரிமான பிரச்சனைக்கு இன்றைய காலங்களில் பலருக்கும் உணவு செரிமானமின்மை மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் அதிகம் ஏற்படுகின்றன. இவர்கள் கரும்பு சாறு தினமும் அருந்த வேண்டும். 
 
கரும்பு சாற்றில் உள்ள பொட்டாசியம் உங்கள் வயிற்றின் அமில சுரப்பு அளவுகளை சமன்செய்ய உதவுகிறது மற்றும் செரிமான சாறுகள் சுரக்கவும் உதவுகிறது. 
 
கரும்பு சாறு நம் உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைப்பதாக அறியப்படுகிறது. தினமும் காலையில் கரும்பு சாறு அருந்தும் நபர்களுக்கு உடலில் கொழுப்பு கரைந்து வெகு சீக்கிரத்தில் உடல் எடை குறைய செய்கிறது. 
 
இதயம் உடலின் அனைத்து பாகங்களுக்கும் ரத்தத்தை செலுத்தும் அரும்பணியை இதயம் செய்கிறது. கரும்பு சாறு அருந்துபவர்களுக்கு இதயம் நலம் மேம்படுகிறது. அவ்வப்போது கரும்பு சாறு பருகும் நபர்களுக்கு இதயத்திற்கு ஏற்படும் அழுத்தங்கள் நீங்கி, இதய பாதிப்பு, மாரடைப்பு போன்றவை ஏற்படாமல் தடுக்க படுகிறது. 
 
உடல் எரிச்சல் வெயில்காலங்களில் உடல் அதிகம் உஷ்ணமடைந்து பலரும் உடல் எரிச்சல் பிரச்சனையால் மிகவும் அவதிப்படுவர். உடல் எரிச்சல் நீங்கி, உடல் குளிர்ச்சி பெற தினமும் கரும்பு சாறுடன் தயிர் சேர்த்து சாப்பிடுவதன் மூலம் மேற்கூறிய பலன்களை பெற முடியும். 
 
மூளை மனிதர்களை இயக்கும் முக்கிய உறுப்பாக மூளை இருக்கிறது. மூளை சுறுசுறுப்பாக இயங்கினால் மட்டுமே நமது அன்றாட பணிகளை சிறப்பாக செய்ய முடியும். கரும்பை சாப்பிட்டு அதன் அதன் சாற்றை நாம் பருகுவதால் மூளையின் செயல்பாடு அதிகரித்து சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள கரும்பு பெரிதும் உதவுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்