நீரிழிவு நோயினால் அவதிப்படுபவர்களுக்கு நிவாரணம் அளிக்கும் ஆவாரம் பூ !!

உடலில் நமைச்சல் இருந்து தொல்லைகொடுத்தால் ஆவாரம் பூவுடன் பச்சைப் பயறு சேர்த்து அம்மியில் வைத்து அரைத்து உடலில் தேய்த்துக் குளித்தால் குணமாகும். 


ஆவாரம் விதைகளை ஒரு கைப்பிடி அளவு எடுத்துவந்து ஒரு சட்டியில் போட்டு பழைய புளித்த மோரை ஊற்றி விதையை ஊறவிடவும்.
 
விதைகள் நன்றாக ஊறியதும் அதனை எடுத்துச் சுத்தமான அம்மியில் வைத்து விழுது பதத்திற்கு அரைத்து எடுத்து அரைப்படி மோரில் கலந்து குடித்துவிடவும்.
 
எலும்புருக்கி நோயினால் அவதிப்படுபவர்களுக்கு ஆவாரம் இலைச் சாறு மாமருந்தாக விளங்குகிறது. இந்த நோயினால் இன்னல் படுகின்றவர்கள் கீழக்காணும் முறையினைக்கையாண்டு பயன் பெறலாம்.
 
ஆவாரம் இலைகளைத் தேவையான அளவுக்குக் கொண்டுவந்து குளிர்ச்சியான தண்ணீரைத் தெளித்து, கல்வத்திலிட்டு நன்றாக இடித்தும் சாறாகப் பிழிந்து எடுத்துக்கொள்ளவும்.
 
இந்த சாறை அரைலிட்டர் அளவுக்கு எடுத்துக் கொண்டு தினசரி காலை, மாலை என இருவேளை குடித்துவரவும். இதனால் எலும்புருக்கி எனும் நோய் நீங்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்