மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படுவதற்கான காரணங்களும் தீர்வுகளும் !!

இன்றைய கால கட்டத்தில் பலரும் மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிப்படுகிறார்கள். இதற்கு முக்கியமான காரணமாக சரியான நேரத்தில் உணவு மற்றும் தண்ணீர் எடுத்த்துக்கொள்ளததேயாகும்.

மலச்சிக்கல் பிரச்சனை இருக்கின்றவர்கள் சரியான தூக்கம் இல்லாமை மற்றும் வயிறுவலி போன்ற பல ஆரோக்கிய பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றனர். நம் உடலில் உள்ள உணவுக் கழிவுகள் எளிதாக நம் உடலில் இருந்து வெளியேற நம் உணவுகளில் கட்டாயம் நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்துக்கள் இருக்க வேண்டும்.
 
அதிக நார்ச்சத்து உணவுகளை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வது. காப்பி மற்றும் டீ அதிகம் அருந்துவதை குறைத்துக்கொள்ளவேண்டும். செயற்கை குளிர்பானங்கள் அருந்துவதை தவிர்க்கவேண்டும்.
 
உணவு கழிகளை வெளியேற்றும் உணர்வு வந்தவுடனே வெளியேற்ற வேண்டும். தாமதிக்கும் போது மலச்சிக்கல் பிரச்சனையை இன்னும் அதிகமாகின்றது.
 
இரவு உணவுக்கு முன்னர் ஒரு தேக்கரண்டி விளக்கெண்ணெய் வெண்ணீருடன் கலந்து பருகி வந்தால் மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து நிரந்தரமான தீர்வை பெற முடியும்.
 
எலுமிச்சை சாற்றில் வெண்ணீர் கலந்து வெறும் வயிற்றில் குடித்து வந்தால் மலச்சிக்கல் தீரும். இது உடலுக்கும் உற்சாகம் கொடுக்கும்.
 
வெந்தயத்தை தினமும் வெறும் வயிற்றில் விழுங்கி வந்தால் மலச்சிக்கல் பிரச்சனைக்கு தீர்வை பெற முடியும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்