எளிதில் கிடைக்கும் இந்த மூலிகையில் உள்ள ஏராளமான நன்மைகள் !!

குப்பைமேனி இலையை மஞ்சளுடன் அரைத்து பூசி வந்தால் பெண்களுக்கு முகத்தில் வளரும் முடிகள் உதிர்ந்து முகம் பொலிவாக மாறும்.

குப்பைமேனி இலை சாற்றை காச்சிய பாலில் கலந்து குடித்து வந்தால் சுவாசக் கோளாறுகள் நீங்குவதுடன் மலச்சிக்கலும் நீங்கும்.
 
குப்பைமேனி செடி ஒன்றை வேருடன் பிடுங்கி நன்றாக தண்ணீரில் கழுவி சுத்தம் செய்து விட்டு அதனுடன் ஏழு மிளகு சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
 
இதனை காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் அளவு தொடர்ந்து மூன்று வாரங்கள் சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தம் ஆகி இரத்த ஓட்டமும் சீராகும்.
 
சிறியவர்களுக்கு மட்டுமின்றி பெரியவர்களுக்கும் பிரச்சனையாக இருக்கும் குடல் புழுக்களுக்கு சிறந்த தீர்வு குப்பை மேனி.
 
வேருடன் குப்பைமேனி செடியை பிடுங்கி நீரினால் கழுவி சுத்தம் செய்து சிறு துண்டுகளாக வெட்டி சுக்கு, வெள்ளைப்பூண்டு மற்றும் சீரகம் சேர்த்து கசாயம் போன்று செய்து குடித்து வந்தால் குடல் புழுக்கள் இறந்து மலம் வழியாக வெளியேறி விடும்.
 
தோல் நோய் உள்ளவர்கள் குப்பைமேனி இலையுடன் சிறிது மஞ்சள் மற்றும் உப்பு சேர்த்து நோய் பாதிக்கப்பட்ட இடத்தில் பூசி ஒரு மணி நேரம் கழித்து கழுவி வந்தால் தோல் நோய்கள் குணமாகும்.
 
படுக்கை புண் உள்ளவர்கள் குப்பைமேனி இலையை விளக்கு எண்ணெய்யில் சேர்த்து காய்ச்சி படுக்கை புண் உள்ள இடத்தில் பூசி வந்தால் படுக்கை புண் ஆறும்.
 
பத்து குப்பைமேனி இலைகளை பசும்பாலில் சேர்த்து வேகவைத்து குடித்து வந்தால் உடல் அழகும் ஆரோக்கியமும் பெரும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்