உயிரிழந்த காதலியை திருமணம் செய்துகொண்ட காதலன்! மாலை மாற்றிய நெகிழ்ச்சியான சம்பவம்

ஞாயிறு, 20 நவம்பர் 2022 (15:23 IST)
உயிரிழந்த காதலியை திருமணம் செய்துகொண்ட காதலன்! மாலை மாற்றிய நெகிழ்ச்சியான சம்பவம்
உயிரிழந்த காதலிக்கு மாலை மாற்றி திருமணம் செய்து கொண்ட இளைஞர் ஒருவரால் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பிரார்த்தனா என்ற பெண்ணை காதலித்து வந்தார். இருவரும் நெருங்கி பழகி காதலித்த நிலையில் திடீரென காதலி பிரார்த்தனா உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்
 
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த இளைஞர் உயிரிழந்த பிரார்த்தனாவை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார். இதனை அடுத்து அவர் பிணமாக இருந்த காதலிக்கு மாலை மாற்றி திருமணம் செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
இறுதிச் சடங்கின் போது அவர் உயிரற்ற காதலிக்கு மாலை மாற்றி திருமணம் செய்து கொண்ட பின்னரும் தனது மனைவி பிரார்த்தனா மட்டும் தான் என்றும் இனி யாரையும் திருமணம் செய்யமாட்டேன் என்றும் அவரது பிணத்தின் மீது சத்தியம் செய்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் உள்ளவர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்