வேலை வாங்கி தருவதாக ரூ.3 கோடி மோசடி.. காதலியுடன் கைதான நபர்..!

Mahendran

வெள்ளி, 8 மார்ச் 2024 (18:18 IST)
ரயில்வே மற்றும் காவல் துறையில் வேலை வாங்கி தருவதாக பலரிடம் ரூ.3 கோடி வரை மோசடி செய்த ரமேஷ் என்பவர் தனது காதலியுடன் கைது செய்யப்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
ஆந்திர மாநிலத்தில் ரமேஷ் என்ற இளைஞர் போலீஸ் போல நடித்து ரயில்வே மற்றும் காவல்துறையில் வேலை வாங்கி தருவதாக பல இளைஞர்களிடம் ஏமாற்றி பணம் பரித்துள்ளதாக தெரிகிறது. 
 
ரமேஷ் தனது காதலியுடன் இணைந்து சுமார் 30 இளைஞர்களிடம் மூன்று கோடி ரூபாய் வரை வசூல் செய்ததாகவும் இதனை அடுத்து யாருக்கும் வேலை வாங்கி தராததால் சந்தேகம் அடைந்த இளைஞர்கள் காவல்துறையில் புகார் அளித்ததாகவும் தெரிகிறது 
 
இந்நிலையில் தன்னை போலீஸ் என அறிமுகப்படுத்திக் கொண்டு போலீஸ் உடையில் ரமேஷ் மற்றும் அவரது காதலி சுற்றி வந்துள்ள நிலையில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்கள்,
 
 விசாரணையில் ரமேஷுக்கு ஏற்கனவே இரண்டு மனைவிகள் இருப்பதாகவும் வேலை கிடைக்காத இளைஞர்களை குறி வைத்து தனது மூன்றாவது காதலியுடன் இணைந்து மோசடி செய்ததாகவும் தெரியவந்தது. இதனை அடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை செய்து கொண்டிருக்கின்றனர்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்