அதில், ஆருத்ரா, ஹிஜாவு, ஐ.எப்.எஸ் போன்ற பெரிய நிதி நிறுவனங்களுக்கு மூளையாகச் செயல்பட்டது ஒரே ஏஜென்டுகள் தான் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஒரு ஏஜென்ட் தனக்கு கீழ் 100 நபர்களை வைத்துக்கொண்டு, நிறுவன தொடக்கத்தில் அவர்களை இணைய வைத்து கமிஷன் பெறுகிறார். நிறுவனத்தின் லாபமடைவது போல மக்களை நம்பவைத்து, நிறுவத்தில் பலரை இணையவைக்கின்றனர்.
சம்பந்தப்பட்ட நிறுவனமே தங்களின் தொழிலைப் பெருக்க வேண்டி, ஏஜென்டுகளுக்கு கமிஷன் கொடுத்து, இதுபோன்ற செயல்களில் ஈடுபட வைப்பதாக தகவல் தெரிவித்துள்ளனர்.