சிக்கனுக்காக உறவினரை கொலை செய்த இளைஞர்: ஐதராபாத்தில் அதிர்ச்சி

செவ்வாய், 3 ஏப்ரல் 2018 (18:00 IST)
இளைஞர் ஒருவர் தனக்கு நிச்சயதார்த்ததில் சிக்கன் கைக்காததால் அவரது உறவினரை கொலை செய்த சம்பவம் ஒன்று ஐதராபாத்தில் நிகழ்ந்துள்ளது.
 
ஐதராபாத்தை சேர்ந்தவர் அஷ்பக் அலி, இவர் தனது உறவினர் திருமண நிச்சயதார்த்த விழாவிற்கு சென்றுள்ளார். அந்த விழாவில் கறி விருந்து பரிமாறப்பட்டுள்ளது. 
 
அப்போது அவர் தனது உறவினரான அன்வரை சந்தித்துள்ளார். பின்னர் விழாவில் உணவு வேளை முடிந்து தாமதமாக அஷ்பக் சாப்பிட சென்றுள்ளார். அதனால் அவருக்கு சிக்கன் கிடைக்கவில்லை. இதனால் அன்வர் அவரை வேறு உணவு சாப்பிடுமாறு கேட்டுள்ளார்.
 
ஆனால், அவர் தனக்கு சிக்கன் தான் வேண்டும் என தகராறு செய்துள்ளார். இந்த வாய் தகராறு சண்டையாக மாறியதை அடுத்து அஷ்பக் தனது நண்பர்களை வரவழைத்து அன்வரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். இது தொடர்பாக போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்