அசாம் மாநிலம் நாகோம் மாவட்டம் பொற்கொலா என்ற இடத்தை சேர்ந்தவர் ருப்ஜோதி. இவரது கணவர் கூலித்தொழிலாளி. இவர்களுக்கு 2 வயதில் ஒரு மகள் உள்ளார். கடந்த 3 மாதத்திற்கு முன்பு தம்பதியினருக்கு, ஆண் குழந்தை பிறந்துள்ளது. ருப்ஜோதிக்கு குடிப்பழக்கம் உண்டு.
இந்நிலையில் கடந்த 5 தினங்களுக்கு முன்னர் குடிபோதையில் இருந்திருக்கிறார் ருப்ஜோதி. அப்போது அவருடைய 3 மாத கைக்குழந்தை அழுதுள்ளது. ருப்ஜோதி குழந்தையை சமாதானம் செய்ய முயற்சி செய்திருக்கிறார். ஆனால் குழந்தை சமாதானம் ஆகவில்லை. இதனால் ஆத்திரமுற்ற ருப்ஜோதி, பிஞ்சுக் குழந்தை என்றும் பாராமல், குழந்தையை அடித்தே கொன்று, பிணத்தை அருகிலுள்ள குட்டையில் வீசியுள்ளார்.