ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம், நந்திகோடூரு பகுதியைச் சேர்ந்தவர் சந்திரமோகன். சிக்கன் பக்கோடா கொசுறு கேட்டதால் ஏற்பட்ட தகராறில் இவர் அடித்து கொல்லப்பட்டார்.
ஒரு உணவகத்தில், சிக்கன் பக்கோடா சாப்பிட்டு விட்டு, மேலும் கொசுறு கொஞ்சம் வேண்டுமென உணவக ஊழியரிடம் கேட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் ஊழியருக்கும், சந்திரமோகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, கைகலப்பாக மாறியது. ஹோட்டல் ஊழியரை அடிப்பதை கண்டு, மற்ற ஊழியர்களும் சந்திரமோகனை அடித்துள்ளனர்.
பின்னர் சந்திரமோகன் பலத்த காயங்களுடன் தனது வீட்டாரை அழைத்துச் சென்று மீண்டும் தகராறில் ஈடுபட்டார். இதனால் உணவக ஊழியர்கள் மீண்டும் சந்திரமோகனை சரமாரியாக தாக்கி உள்ளனர்.
இதில் படுகாயமடைந்த சந்திர மோகனை அவரது உறவினர்கள் கர்னூல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த கர்னூல் போலீஸார், உணவக உரிமையாளர் உட்பட 4 ஊழியர்களை கைது செய்தனர்.