கல்யாணம் ஆன 1 மாதத்தில் மனைவி 4 மாத கர்ப்பம்! – அதிர்ச்சியில் உறைந்த கணவன்!

Webdunia
வெள்ளி, 24 ஜூன் 2022 (10:13 IST)
உத்தர பிரதேசத்தில் திருமணம் ஆன ஒன்றரை மாதத்திலேயே மனைவில் 4 மாதம் கர்ப்பமாக இருந்தது தெரிய வந்த கணவர் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளார்.

உத்தர பிரதேசத்தின் மஹாராஜ்கஞ்ச் மாவட்டத்தின் கொல்ஹுய் பகுதியை சேர்ந்த இளைஞருக்கு சமீபத்தில் இளம்பெண் ஒருவருடன் திருமணம் நடந்துள்ளது. திருமணமாகி சுமார் ஒன்றரை மாதங்களாக நல்லபடியாக இல்லற வாழ்க்கை சென்றுள்ளது.

ஒருநாள் திடீரென அந்த பெண் வயிற்றை வலிப்பதாக கூறியுள்ளார். இதனால் பெண்ணின் மாமியார் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு அவரை சோதித்த மருத்துவர் அவர் 4 மாத கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளார்.

இதை கேட்டு பெண்ணின் மாமியாரும், கணவரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். திருமணமாகி ஒன்றரை மாத காலமே ஆகியுள்ள நிலையில் பெண் 4 மாத கர்ப்பமாக இருக்கிறார். பெண் கர்ப்பமாக இருப்பது தெரிந்தே பெண் வீட்டார் தங்களை ஏமாற்றி இந்த திருமணத்தை நடத்தியுள்ளதாக பெண்ணின் கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்