காதலர் வீட்டிற்கு சென்ற இளம்பெண் தீ வைத்து எரிப்பு

Webdunia
திங்கள், 23 மே 2016 (21:22 IST)
திருமணம் செய்து கொள்வதற்காக, காதலன் வீட்டிற்கு சென்ற ஒரு இளம்பெண்ணை அவரது காதலர் மற்றும் அவரது குடும்பம் சேர்ந்து உயிரோடு தீ வைத்து எரித்த சம்பவம் உத்திரபிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
உத்திரபிரதேசத்தின் பரோலி எனும் பகுதியில் வசிப்பர் நஜ்மா(21). இவர் யூனுஸ் என்பவரை காதலித்து வந்தார். இந்நிலையில், யூனுஸ், நஜ்மாவை திருமணம் செய்து கொள்ளலாம் வா என்று அழைத்துள்ளார்.
 
அதை நம்பி அவரது வீட்டிற்கு சென்ற நஜ்மாவை யூனுஸ் தீ வைத்து எரித்துள்ளார். இதையடுத்து பலத்த தீ காயங்களுடன் நஜ்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 
 
யூனுஸ் மற்றும் அவரது குடும்பம் தலைமறைவாகியுள்ளனர். நஜ்மாவிடம் வாக்குமூலம் பெற்று, வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், யூனுஸ் மற்றும் அவரது பெற்றோர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்