டிக்கெட்டை கேன்சல் செய்யாமலே பயண தேதியை மாற்றலாம்! - ரயில்வே வழங்கும் புதிய வசதி!

Prasanth K

புதன், 8 அக்டோபர் 2025 (09:49 IST)

ரயில்களில் குறிப்பிட்ட தேதியில் புக் செய்யப்படும் டிக்கெட்டுகளை கேன்சல் செய்யாமலே அதன் தேதியை மாற்றிக் கொள்ள புதிய வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 

இந்திய ரயில்வே துறையின் ரயில் சேவைகள் நாடு முழுவதும் செயல்பட்டு வரும் நிலையில், பயணிகள் தங்கள் பயணங்களை முன்பே திட்டமிட்டு முன்பதிவு செய்வது வாடிக்கையாக உள்ளது. அவ்வாறாக முன்பதிவு செய்த பிறகு பயண தேதியை மாற்ற வேண்டியிருந்தால், முதலில் முன்பதிவு செய்த டிக்கெட்டை கேன்சல் செய்துவிட்டு மீண்டும் புதிதாக டிக்கெட் புக் செய்ய வேண்டும். இதனால் கேன்சல் செய்யும் சார்ஜ் பிடித்தம் செய்யப்பட்டு குறைந்த தொகையே திரும்ப அளிக்கப்படுகிறது.

 

இந்நிலையில் டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகள் தங்கள் பயண தேதியை மாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டால், முன்பதிவை கேன்சல் செய்யாமல் அதை வேறு தேதிக்கு மாற்றிக் கொள்ளும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. டிக்கெட்டை பயணிகள் மாற்றம் செய்ய விரும்பும் தேதியில் இருக்கைகள் இருப்பு இருந்தால் மட்டுமே இவ்வாறாக மாற்றிக் கொள்ள முடியும். மேலும் அன்றைய தேதியில் டிக்கெட் விலை கூடுதலாக இருக்கும் பட்சத்தில் முன்பதிவு தொகை தவிர்த்து கூடுதலாக உள்ள தொகையை செலுத்த வேண்டும். இந்த வசதி ஜனவரியில் பயன்பாட்டிற்கு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்