ஐஆர்சிடிசி மூலம் ஆன்லைன் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான விதிமுறைகளை மாற்றியமைத்துள்ளது. புதிய விதிமுறையின்படி, வரும் அக்டோபர் 1 ஆம் தேதி முதல், டிக்கெட் முன்பதிவு செய்ய ஆதார் சரிபார்ப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
புதிய விதிமுறைகளின்படி, ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய முதல் 15 நிமிடங்களுக்கு ஆதார் சரிபார்ப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது, உண்மையான பயணிகள் எளிதாக டிக்கெட் முன்பதிவு செய்வதற்கும், அங்கீகரிக்கப்படாத நபர்களின் முறைகேடான முன்பதிவுகளை தடுப்பதற்கும் உதவும். அதே சமயம், ரயில்வே முகவர்களுக்கான 10 நிமிட கட்டுப்பாடுகள் தொடர்ந்து அமலில் இருக்கும்.