உத்தரபிரதேச மாநிலத்தில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மற்றும் துணை முதல்வர் கேசவ் பிரசாத் ஆகிய இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருப்பதாகவும் இதனை அடுத்து இருவரும் மாறி மாறி மோடி, அமித்ஷா, நட்டாவிடம் புகார் அளித்து கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும் துணை முதல்வர் கேசவ் பிரசாத், மோடி அமித்ஷா நட்டா ஆகியவர்களை சந்தித்து யோகி ஆதித்யநாத் குறித்து புகார் கூறியதாகவும் கூறப்படுகிறது. தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று யோகி ஆதித்யநாத் ராஜினாமா செய்ய வேண்டும் என்று பாஜகவில் உள்ள சில தலைவர்களும் குரல் எழுப்பி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.