ரம்ஜானும், அட்ஷய திருதியையும் ஒரே நாளில்..! – யோகி ஆதித்யநாத் போட்ட அதிரடி உத்தரவு!

Webdunia
வியாழன், 28 ஏப்ரல் 2022 (09:53 IST)
இஸ்லாமிய பண்டியகையான ரம்ஜானும், இந்து பண்டிகையான அட்ஷய திருதியையும் ஒரே நாளில் வருவதால் உத்தர பிரதேச முதல்வர் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.

கடந்த சில நாட்கள் முன்னதாக டெல்லியில் ஜஹாங்கீர்புரி பகுதியில் அனுமான் ஜெயந்தி ஊர்வலத்தின்போது இரு மதத்தினரிடையே ஏற்பட்ட மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வன்முறை சம்பவத்திற்கு வழிபாட்டு தலத்தில் ஒலிப்பெருக்கியில் அதிக சத்தத்தில் வைக்கப்பட்ட பாடலும் காரணம் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் அடுத்த மாதம் 5ம் தேதி ரம்ஜான் பண்டிகையும், அக்‌ஷய திருதியை பண்டிகையும் ஒரே நாளில் நடைபெறுகிறது. இதனால் இரு மதத்தினரிடையே எந்த மோதலும் ஏற்பட கூடாது என்பதற்காக உத்தர பிரதேச அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் உத்தரவின் பேரில் மசூதி, கோவில்களில் உள்ள ஒலிப்பெருக்கிகளை அரசு அதிகாரிகள் நீக்கி வருகின்றனர். மேலும் பாதுகாப்புக்காக பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்