யோகி ஆதித்யநாத் சென்ற விமானம் விபத்து? – உத்தர பிரதேசத்தில் பரபரப்பு!

Webdunia
ஞாயிறு, 26 ஜூன் 2022 (10:54 IST)
வாரணாசியில் இருந்து யோகி ஆதித்யநாத் பயணித்த ஹெலிகாப்டர் மீது பறவை மோதி விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச முதல்வராக தொடர்ந்து இரண்டாவது முறையாக பதவியேற்று செயல்பட்டு வருபவர் பாஜகவை சேர்ந்த யோகி ஆதித்யநாத். முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் இன்று காலை ஹெலிகாப்டரில் வாரணாசியில் இருந்து லக்னோ புறப்பட்டு சென்றுள்ளார்.

ஹெலிகாப்டர் புறப்பட்ட சில நிமிடங்களில் பறவை ஒன்று ஹெலிகாப்டர் மீது மோதியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் உடனடியாக ஹெலிகாப்டர் வாரணாசியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் யோகி ஆதித்யநாத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்