புதன்கிழமை முதல் இயல்பு நிலைக்கு திரும்பும்: எஸ் வங்கி: வாடிக்கையாளர்கள் நிம்மதி

ஞாயிறு, 15 மார்ச் 2020 (11:46 IST)
வாராக்கடன் காரணமாக திவாலாகும் நிலைக்குத் தள்ளப்பட்ட எஸ் வங்கியை திடீரென இந்திய ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. மேலும் எஸ் வங்கி வாடிக்கையாளர்கள் ரூபாய்  மாதம் ரூபாய் 50,000 மட்டுமே பணம் எடுக்க முடியும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டது
 
இந்த நிலையில் நஷ்டத்தில் இயங்கிய எஸ்.வங்கியை மீட்க மத்திய அரசு பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்தது. இதன்படி எஸ்பிஐ வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஆக்ஸிஸ் வங்கி ஆகியவை ஆயிரக்கணக்கான கோடிகள் வழங்கி எஸ்.வங்கியை மீட்க உதவின. 
 
இதன் காரணமாகவே தற்போது நஷ்டத்திலிருந்து மீண்டுள்ள எஸ் வங்கி, வரும் புதன்கிழமை முதல் அதாவது மார்ச் 18ம் தேதி முதல் வழக்கம் போல் செயல்படும் என்றும் எஸ் வங்கி வாடிக்கையாளர்கள் தங்களது வங்கிக்கணக்கில் உள்ள பணத்தை எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம் என்றும் இனி எஸ். வங்கிக்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லை என்றும் அறிவித்துள்ளது
 
இதனால் எஸ் வங்கி வாடிக்கையாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். எஸ் வங்கி போல் மற்ற வங்கிகள் திவாலாகும் போது இதே நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர் 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்