19 வருடங்களுக்கு முன் இதே நாள்: டிராவிட் லட்சுமணன் செய்த சாதனையின் மலரும் நினைவுகள்

ஞாயிறு, 15 மார்ச் 2020 (10:20 IST)
டிராவிட் லட்சுமணன் செய்த சாதனையின் மலரும் நினைவுகள்
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத ஒரு டெஸ்ட் போட்டி என்றால் அது கடந்த 2001 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடந்த டெஸ்ட் போட்டி தான்
 
இந்த போட்டியில் இந்திய அணி ஃபாலோ ஆன் ஆகி அதன் பின்னர் 176 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பதும் இந்த போட்டியில் ராகுல் டிராவிட் மற்றும் ஜிபிஎஸ் லட்சுமணன் ஆகியோர் அதிரடியாக விளையாடி இந்திய அணிக்கு வெற்றி தேடித் தந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த போட்டியில் முதல் இனிங்ஸில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 445 ரன்கள் குவித்தது இதனையடுத்து இந்திய அணி 171 ரன்கள் மட்டுமே எடுத்து ஃபாலோ ஆன் ஆனது. இதனால் இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வி அடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது
 
ஆனால் திடீரென ராகுல் டிராவிட் மற்றும் விவிஎஸ் லக்ஷ்மன் ஆகியோர் விஸ்வரூபம் எடுத்து ரன்களை குவித்தனர். ராகுல் டிராவிட் 180 ரன்களும் வி எஸ் லட்சுமணன் 281  ரன்கள் எடுத்ததால் இந்திய அணியின் ஸ்கோர் 657ஆக இருந்த போது டிக்ளேர் செய்தது 
 
இதனை அடுத்து இரண்டாவது இன்னிங்சில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 212 ரன்கள் மட்டுமே எடுத்ததால் இந்திய அணி 176 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது ஃபாலோ ஆன் ஆன ஒரு அணி அந்த போட்டியில் ஜெயிப்பது என்பது மிக அரிதாக நடக்கும் ஒரு நிகழ்வு என்பதால் இந்த போட்டியை 19 வருடங்கள் கழித்தும் இப்போதும் நான் பேசிக் கொண்டிருக்கிறோம் என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்