கரையை கடக்க தொடங்கியது யாஸ் புயல்! – அடித்து வெளுக்கும் மழை!

புதன், 26 மே 2021 (09:44 IST)
வங்க கடலில் உருவான யாஸ் புயல் தற்போது கரையை கடக்க தொடங்கியுள்ள நிலையில் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் யாஸ் புயலாக உருமாறிய நிலையில் இன்று கரையை கடக்கிறது. அதிதீவிர புயலாக யாஸ் கரையை கடக்கும் நிலையில் மணிக்கு 155 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தற்போது ஒடிசா அருகே தம்ரா – பாலசோர் இடையே யாஸ் புயல் கரையை கடந்து வரும் நிலையில் பல பகுதிகளில் சூறைக்காற்றுடன் மழையும் பெய்து வருகிறது. இந்நிலையில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் ஏற்கனவே புயல் பாதுகாப்பு மையங்களுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். புயலுக்கு பிறகான உதவிகளுக்கு பேரிடர் மேலாண்மை படையினர் தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்