75 ஆண்டுகளாக இலவசமாக கல்வி அளிக்கும் முதியவர்… மரத்தடி நிழலே வகுப்பறை!

செவ்வாய், 29 செப்டம்பர் 2020 (16:31 IST)
ஒடிசாவில் 75 ஆண்டுகளாக இலவசமாக கிராம மக்களுக்கு கல்வி பயிற்றுவித்து வருகிறார் நந்த பிராஸ்டி என்பவர்.

ஒடிசா மாநிலத்தில்  75 ஆண்டுகளாக ஒரு பைசா கூட கட்டணம் வாங்காமல் ஏழை எளிய மக்களுக்கு கல்வியை சொல்லி தருகிறார் நந்தா பிராஸ்டி எனும் முதியவர். மாணவர்களுக்கு பகலில் பாடம் சொல்லித்தரும் அவர் இரவு நேரங்களில் கிராமத்தைச் சேர்ந்த வயதானவர்களுக்கும் அவர் பாடம் நடத்துகிறார்.

கிட்டத்தட்ட 75 ஆண்டுகளாக பாடம் சொல்லித் தரும் இவரிடம் முதன் முதலாக படித்தவர்களின் பேரன் பேத்திகள் எல்லாம் இப்போது அவரிடம் படிக்கிறார்களாம். இவர் பாடம் சொல்லித் தரும் பர்தாந்தா கிராமத்தில் குழந்தைகளுக்கு வகுப்புகள் நடத்துவதற்கு  கிராமத்தினர் ஒரு கட்டிடம் கட்டித்தர முடிவு செய்துள்ளனராம்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்