கொரோனா தடுப்பூசி போடலைன்னா.. சம்பளம் கிடையாது! – கலெக்டர் அறிவிப்பால் அதிர்ச்சி!

ஞாயிறு, 7 பிப்ரவரி 2021 (14:42 IST)
ஒடிசாவின் கடாக் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களுக்கு சம்பளம் கிடையாது என மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள சூழலில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு மருந்துகள் அவசரகால தடுப்பூசியாக மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. எனினும் பல பகுதிகளில் முன்கள பணியாளர்கள் பலர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள தயக்கம் காட்டி வருகின்றனர். இதனால் சமீப காலத்தில் கொரோனா தடுப்பூசி டோஸ்கள் பல வீணாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் ஒடிசாவின் கடாக் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் கட்டாக் மாவட்டத்தில்தான் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கை மிக குறைந்த அளவில் உள்ளது. இது வருந்தத்தக்க விஷயம். எனவே அனைத்து தரப்பினரையும் தடுப்பூசி போட்டுக் கொள்ள ஊக்கப்படுத்த வேண்டும். குறிப்பாக சுகாதரத்துறை அதிகாரிகள், அங்கன்வாடி பணியாளர்கள் ஆகியோர் கொரோனா தடுப்பூசியை வரும் 10ம் தேதிக்குள் போட்டுக் கொள்ள வேண்டும்.இல்லையெனில் அவர்களின் சம்பளம் நிறுத்தி வைக்க வேண்டும்” என உத்தரவிட்டுள்ளார்.

மக்களை கட்டாயப்படுத்தி தடுப்பூசி போட்டுக்கொள்ள சொல்லும் ஆட்சியரின் வழிமுறை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்