உலகின் முதல் தலித் அர்ச்சகருக்கு வரவேற்பு அளித்த தலைமை அர்ச்சகர்

செவ்வாய், 10 அக்டோபர் 2017 (11:11 IST)
கோவில்களில் பிராமணர் மட்டுமே அர்ச்சகர் ஆகும் வழக்கம் ஆண்டாண்டு காலமாக இருந்த நிலையில் அனைத்து ஜாதியினர்களுக்கும் அர்ச்சகர் ஆகும் பணியை வழங்க வேண்டும் என்று நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது.



 
 
இந்த நிலையில் சமீபத்தில் பிராமணர் அல்லாதவர்களும் அர்ச்சகர்கள் ஆகலாம் என்று கேரள அரசு அறிவித்தது. இதன்படி அனைத்து ஜாதியினர்களும் எழுத்துத்தேர்வு எழுதினர். இந்த எழுத்து தேர்வில் தலித் உள்பட பல ஜாதியினர் தேர்ச்சி பெற்றனர்.
 
இந்த நிலையில் அர்ச்சகர் தேர்வில் வெற்றி பெற்ற திருச்சூர் அருகிலுள்ள கொரட்டி பகுதியைச் சேர்ந்த யேது கிருஷ்ணன் என்ற 22 வயது வாலிபருக்கு நேற்று அர்ச்சகர் பணிக்கான ஆணை வழங்கப்பட்டது. இவருக்கு மணப்புறம் சிவன் கோவிலில் அர்ச்சகர் பணி வழங்கப்பட்டுள்ளது.
 
உலகின் முதல் தலித் அர்ச்சகராக பதவியேற்க வந்த கிருஷ்ணனை கோவில் நிர்வாகிகள் மற்றும் தலைமை அர்ச்சகர் நேற்று வரவேற்றனர். தலைமை அர்ச்சகர் கிருஷ்ணனை கோவிலின் கருவறைக்கு அழைத்து சென்று மந்திரங்களை சொல்லிக்கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்